பதுளை, கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் 86 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை பதுளை – பல்லேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதுடன், ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி உத்தியோகத்தராகவும் கடமையாற்றுவதாக என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், முகவர் ஒருவரைப் பயன்படுத்தி திடீர் சோதனை நடத்திய பொலிஸார், விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த 86 கிராம் கஞ்சாவுடன் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இன்று திங்கட்கிழமை (17) பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.








