Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்; பேரணியில் கூச்சலிட்ட உதய கம்மன்பில

மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்; பேரணியில் கூச்சலிட்ட உதய கம்மன்பில

10 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

14 மாதங்களாக நீங்கள் கூறிய பொய்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் ஒரே மேடையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நுகேகொடையில் நேற்று (21) நடைபெற்ற அநுர அரசுக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தங்காலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, நுகேகொடை பேரணி, போதைப்பொருள் வியாபாரிகளைப் பாதுகாக்கவே நடத்தப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். இது என்ன முட்டாள்தனம்?

நுகேகொடை பேரணியில் யாராவது போதைப்பொருட்களுக்கு ஆதரவாகப் பேசினார்களா? இந்த அரசு பயந்துவிட்டது. ஒவ்வொரு கூட்டத்திலும் எதிர்க்கட்சிகளைப் போதைப்பொருள் ஆதரவாளர்கள் என்று அரசு குற்றம் சாட்டுகின்றது.

இப்போது மக்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. ஜனாதிபதி கூறிய பொய்களை மக்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் மக்கள் இப்போது இந்த அரசுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.

ஜனாதிபதி கூறிய பொய்கள் நிறையவே உள்ளன. அவர் 14 மாதங்களாக பொய்களை மட்டுமே கூறி வருகின்றார். நான் அவருக்கு இன்னும் 14 மாத அவகாசம் தருகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி கூறிய இந்தப் பொய்களுக்கு நாட்டு மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
Next Post
மகரகமயில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

மகரகமயில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு