Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மேலும் நான்கு இடத்திலிருந்த தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டன

மட்டக்களப்பில் மேலும் நான்கு இடத்திலிருந்த தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டன

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்ளத்தினால் அவசரமாக நடப்பட்ட தொல்பொருள் இடம் என்ற பெயர் பலகை நேற்று மாலை (22.11.2025) பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கிரான் பிரதேசத்தில் குடும்பி மலை உட்பட்ட மலை பிரதேசங்கள் பழமை வாய்ந்த ஆலயங்கள் வயல் வெளிகள் போன்ற இடங்களில் காணப்படும் மக்கள் போக்குவரத்து செய்யும் வீதியில் உள்ள சந்திகளில் இப் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் சமூக ஆர்வலர்கள் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தவிசாளர் உபதவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் இணைந்து அவற்றினை அகற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது திகிலிவெட்டை, சாராவெளி, பெண்டுகள் சேனை, முருங்கன் தீவு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டன .தொடர்ந்து இரவு நேரம் ஆனதால் அதற்றும்பணி இடை நிறுத்தப்பட்டது.

அதேசமயம் இன்றய தினம் ஞாயிற்றுக்கிழமையும் ஏனைய பெயர் பலகைகளை அகற்றும் பணியினை தவிசாளர் மேற்கொண்டார். பிரதேச சபையின் அனுமதியின்றி இவை அமைக்கப்பட்டதாகவும் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் மொழியை முன்னுரிமைப்படுத்தாமல் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு இனத்திற்கு செய்யும் துரோகம் என்றும் தொல்லியல் என்று இடங்களை அடையாளப்படுத்திவிட்டு எதிர்காலத்தில் குறித்த பிரதேசங்களை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தவிசாளர் இதன் போது மேலும் கருத்து தெரிவித்தார்.

இவ் நடவடிக்கையினை அவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்
உலக செய்திகள்

லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்

June 21, 2026
டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
Next Post
புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு