வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அந்த அறிவிப்பில், வளிமண்டளவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலுக்கு அமைவாக கிழக்கு மாகணத்தின் பல பகுதிகளிலும் நாளை (25) தொடக்கம் 28.11.2025ம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைக்ககூடியதாகவும் மேலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 கி.மீ 60 கி.மீ வரை வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக இடையிடையே மின் தடைப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றது.
மேலும் தற்போது க.பொ.த உயர்தர பரீட்சையும் இடம்பெறுகின்றமையால் தங்களது தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு விரைவாக முன்னெடுக்குமாறு தங்களை நடவடிக்கைகளை கேட்டுக்கொள்வதோடு அடுத்தடுத்து வரும் வானிலை அறிக்கை தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.- என அறிவிக்கப்பட்டுள்ளது.









