Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்

பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர், ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் கோரி வருவதாகப் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சந்தேகநபர் 2022 ஆம் ஆண்டில் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர், அதே ஆண்டிலேயே அவர் இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்று அங்கு தஞ்சம் கோரியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதுடன், இலங்கை பொலிஸார் தன்னைத் தேடி வீட்டிற்குச் சென்றுள்ளதால், மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்ப நேரிட்டால் சித்திரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்கள் இந்தச் சந்தேகநபரை அநாமதேயமாகவே குறிப்பிட்டுள்ளன. மேலும் அவருடன் அவரது மனைவியும் தஞ்சம் கோரியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களது கோரிக்கைகளை முதலில் அந்நாட்டு உள்துறை அலுவலகம் நிராகரித்த போதிலும், சந்தேகநபர் மீண்டும் அது தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும், தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“2022 ஜனவரி 5 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் இலஞ்சம் கொடுத்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் 2022 செப்டம்பர் 2 ஆம் திகதி அவர் இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் 2022 செப்டம்பர் 15 ஆம் திகதி அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அவர் அந்நாட்டு நீதிமன்ற விசாரணையில் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பிரித்தானியப் பிரஜைகளும் அடங்குவர்.

கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பிரித்தானியப் பிரஜைகளான 42 வயதுடைய அனிதா நிக்கல்சன் மற்றும் அவரது பிள்ளைகளான 14 வயதுடைய அலெக்சாண்டர் மற்றும் 11 வயதுடைய அனபெல் ஆகியோரும் அடங்குவர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச
அரசியல்

நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச

June 14, 2026
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
Next Post
இலங்கை இளையோர் அணி பங்களாதேஷ் பயணம்

இலங்கை இளையோர் அணி பங்களாதேஷ் பயணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.