Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரியர் சேவையில் 4,131 பேரை இணைக்க நடவடிக்கை; துணை அமைச்சர் உறுதி

ஆசிரியர் சேவையில் 4,131 பேரை இணைக்க நடவடிக்கை; துணை அமைச்சர் உறுதி

10 months ago
in செய்திகள்

அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறியுள்ள 4,131 பேர் இந்த ஆண்டில் ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கல்விச் சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் கல்வி நிர்வாக சேவைக்கு இந்த ஆண்டு 502 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அதேபோல் ஆசிரியர் கல்விச் சேவைக்கு 580 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறியுள்ள 04ஆயிரத்து 131 பேர் இந்த ஆண்டு ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதம் வெளியிடப்பட்டது. ஆகவே அதிபர் சேவையில் நிலவும் வெற்றிட பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் போராட்டம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் தெரியாத விடயங்களை சபையில் கூறுகின்றார். இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2023.01.27 ஆம் திகதி வெளியிடப்பட்டு, விண்ணப்பம் கோரப்பட்டது.

2023.03.25 ஆம் திகதி போட்டிப்பரீட்சை நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முன்னர் இந்த வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 04 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சியின் தொழிற்சங்கத்தினர்தான் நீதிமன்றம் சென்றார்கள்.

இந்த மனுக்கள் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு பெற்றுக்கொடுப்போம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை
அரசியல்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

September 14, 2026
Next Post
மூதூரில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

மூதூரில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு