Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் பஞ்சம் இல்லை – நாளையும் புதிய லொறி வரவுள்ளது: மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் பஞ்சம் இல்லை – நாளையும் புதிய லொறி வரவுள்ளது: மாவட்ட அரசாங்க அதிபர்

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது எனவே தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் நாளாந்தம் ஒரு இலச்சத்து 65 ஆயிரம் லீற்றர் எரிபொருள் தேவை இருந்தபோதும் கையிருப்பில் இருந்து இதுவரை 2 இலச்சத்து 50 ஆயிரம் லீற்றர் விநியோகித்துள்ளனா.; அதேவேளை 18 ஆயிரம் லீற்றர் விநியோகிக்க தயாராக இருக்கின்றனர் 6500 லீற்றர் கொள்வனவு கொண்ட 35 பவுசர்கள் இருக்கின்றன. அவைகள் கொள்வனவுக்கு அனுப்பபட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளாந்தம் 3 ஆயிரம் லீற்றர் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இன்று 6 ஆயிரம் லீற்றர் முடிவடைந்துள்ளது. எனவே இது தேவையில்லாத கொள்வனவு. எனவே இது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அனர்த்த நிலை கட்டுக் கடங்காத நிலையில் இருக்கும் போது செய்வது போல ஒரு சுமூகமான நிலையில் இவ்வாறு செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை ஏற்படுத்த தேவையில்லை. அதேவேளை டீசல் கொள்வனவு செய்ய என அனுப்பிய பவுசர்கள் டீசலை கொள்வனவு செய்யாது பெற்றோலை கொள்வனவு செய்து வருமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

இவ்வாறு கொள்வனவு செய்த பெற்றோலுடன் பவுசர்கள் நாளை மட்டக்களப்பை வந்தடையும். அப்போது நாளைக்கு பெற்றோல் வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்படும். எனவே தேவையில்லாமல் பதட்டப்பட வேண்டாம். அவ்வாறு பதட்டப்பட்டு பெற்றோலை கொள்வனவு செய்து பதுக்கும் போது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு பெற்றோல் கிடைக்காத நிலை ஏற்படும் எனவே செயற்கை தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
போலி செய்தி பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

போலி செய்தி பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு