மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் யானைகள் நீரில் அல்லலுறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் காடுகள் முழுவதும் வெள்ள நீர் காணப்படுவதனால் வன விலங்குகளும் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குகின்றன.

அதேவேளையில் வன விலங்குகளுக்கு உணவின்மையினால் மனித குடியிருப்புகள் நோக்கி படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








