அனர்த்த நிவாரண பணியில் ஏற்பட்ட அடிதடியில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த நிலையில் பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர், கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் போது, நபரைக் குறித்த பிரதேச சபை உறுப்பினர் தாக்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நிவாரணப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதால், இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட மற்றுமொரு இளைஞரும் காயமடைந்துள்ளார்.
அதேவேளை கைது செய்யப்பட்டவர், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சர்வ ஜன பலய (Sarva Jana Balaya) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்டவர் ஆவார்.








