Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு அம்பிட்டிய தேரருக்கு பிடிவிறாந்துடன் வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு; தேடியும் கிடைக்கவில்லை என்கிறது பொலிஸ்

மட்டு அம்பிட்டிய தேரருக்கு பிடிவிறாந்துடன் வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு; தேடியும் கிடைக்கவில்லை என்கிறது பொலிஸ்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்நேற்று திங்கட்கிழமை (15) நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு பயணத்தடை விதித்து எதிர்வரும் ஜனவரி 26 திகதி வழக்கை ஒத்திவைத்து கட்டளையிட்டு உத்தரவிட்டார்.

கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையடுத்து இந்த தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் (International Covenant on Civil and Political Rights) சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியது.

இந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த 8-12-205 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15ம் திகதி முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வில்லை என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் குறித்த வழக்கு விசாரணையை நேற்று திங்கட்கிழமை 15ம்திகதி எடுத்து கொண்டபோது, தேரர் ஆஜராகாத நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆஜராகி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று ஆஜராக முடியவில்லை எனவும், குறித்த தேரர் தங்கியிருக்கும் மற்றும் மறைந்திருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிகளுக்கு தாம் தேடிச் சென்றதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து அவர் வெளிநாடு செல்வதற்கு பயண தடை விதித்து கட்டனை பிறப்பித்து உத்தரவிட்டு எதிர்வரும் ஜனவரி 26 திகதி வழக்கை ஒத்திவைத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
Next Post
இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.