”மாற்று திறனாளி அல்ல உலகை மாற்றும் திறனாளி “என்ற தொனிப் பொருளில் கோறளைப்பற்று வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகளின் அமைப்பினால்நேற்று (18) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பேத்தாழை குகனேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கோறளைப் பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி பி.ஜெயக்குமார் ஓய்வு பெற்ற சமூக சேவை உத்தியோகத்தர் சி.ஜெயசேகர் சமூக சேவையாளர் க.யுவராஜன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இதன் போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.
மாற்று திறனாளி கலைஞர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கை சிறப்பித்தது.பொலித்தீன் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
ஐந்தாம் ஆண்டு புலைமை பரிசு பரீட்சையில் சித்தி பெற்ற மாற்றுத்திறனாளி குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் மற்றும் மாற்றுத்திறனாளியான கலா பூசனம் மெத்தியயேஸ் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டார் .
இவர்களைத் தொடர்ந்து ஓய்வு பெற்று செல்லும் சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் சி.ஜேயசேகர் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதே போன்று சமூக சேவை செயற்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு குளிர்கால போர்வைகள் வழங்கி வைக்கப்பட்டன. கோறளைப்பற்று வாழ்வின் உதயம் அமைப்பினரால் இவ்வாறான சர்வதேச தினங்களை வருடா வருடம் நினைவு கூர்ந்து செயல்படுவது வழக்கமாகும்.

















