Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை

நாட்டில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை

10 months ago
in செய்திகள்

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக காற்றின் தரம் வீழ்ச்சியடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களிலும் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு காற்றின் தரம் குறைவடைவது உணர்திறன் கொண்ட நபர்களுக்கு (sensitive groups) பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும், சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவபெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளமை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கலாநிதி அஜித் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மனித செயற்பாடுகளும் காற்றின் தரம் குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விசேடமாக தீ வைப்புக்கள், வாகன புகை வெளியேற்றம் போன்றவை இதற்கு காரணமாக அமைவதுடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை நாட்டின் வளிமண்டலத் தரச் சுட்டி அல்லது வளிமண்டலத்தின் தரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை
செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை

October 29, 2026
மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

October 29, 2026
மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 29, 2026
சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!
செய்திகள்

சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!

October 29, 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

October 29, 2026
நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்
காணொளிகள்

நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்

October 29, 2026
Next Post
பிரதேச செயலகத்தினை முற்றுகையிடப்போவதாக கூறியவர்கள் பொது அமைப்புகள் அல்ல; பாலமீன்மடு பொது அமைப்புகள்

பிரதேச செயலகத்தினை முற்றுகையிடப்போவதாக கூறியவர்கள் பொது அமைப்புகள் அல்ல; பாலமீன்மடு பொது அமைப்புகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு