அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி சுமார் 25க்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த பஸ், பிரதான வீதியின் மஹிந்தபுர சந்தியில் இன்று (25) காலை 7:00 மணி அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது பஸ்ஸினுள் இருந்த பயணிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, சேருநுவர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் எவருக்கும் பாரிய உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மற்றும் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









