நாட்டில் உள்ள அனைத்து வாடகை முச்சக்கர வண்டிகளுக்கும் பொதுவான கட்டணத்தை அறிமுகப்படுத்துமாறு ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதேவேளை மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கையடக்க தொலைபேசி செயலிகள் மூலம் போக்குவரத்து சேவைகளை வழங்கும் ஓட்டுநர்களால், சாதாரண முச்சக்கரவண்டி ஓட்டுநர் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.








