Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2025ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவு கோரி விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

2025ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவு கோரி விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவை கோரி விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளன.

வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரமவினால் அறிவிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவாக, 05 மாத அடிப்படைச் சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி இன்று (29) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் விமான நிலைய சிறிலங்கா சுதந்திர ஊழியர் சங்கம், பொதுஜன ஊழியர் சங்கம், முற்போக்கு ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் சிறிலங்கன் விமான சேவையின் சிறிலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

விமான நிலைய நிறுவனத்தின் வருடாந்த தேறிய இலாபம் 21 பில்லியன் ரூபாயாக உள்ள பின்னணியில், தற்போது 2025ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவாக இரண்டு மாத அடிப்படைச் சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் முஹந்திரம் இதன்போது தெரிவித்தார்.

இதற்கமைய, இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து குறைந்தபட்சம் மேலும் இரண்டு மாத அடிப்படைச் சம்பளத்தையாவது போனஸாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
சவுதி அரேபியாவில் ஹவுத்தி தாக்குதல் தீவிரம்; அமெரிக்கா எச்சரிக்கை!
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் ஹவுத்தி தாக்குதல் தீவிரம்; அமெரிக்கா எச்சரிக்கை!

September 20, 2026
மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!

September 20, 2026
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!
செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!

September 20, 2026
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு