வடக்கில் யார் கைதுசெய்யப்பட்டாலும் கிழக்கில் யார் கைதுசெய்யப்பட்டாலும் அவர்கள் கடந்த காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் சட்டத்திற்குட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
டக்ளஸின் கைதை எதிர்க்கட்சிகள் சார்பாக அரசியல் பழிவாங்கல் என்று சொல்வதை நாங்கள் விரும்பவில்லை.கிழக்கில் நடந்த படுகொலைகளிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும்.அவர்களை பழிவாங்குவதாக நாங்கள் கருதவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புகையிரதம் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் அதன் குறைபாடுகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று (31) இரவு மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.








