மட்டக்களப்பு கல்லடிப்பால பிரதான வீதியில் ஜீவி வைத்தியசாலைக்கு எதிராக உள்ள காப்புறுதி நிறுவனத்தின் முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை மீட்கப்பட்ட இந்த சடலம் அக்கரைப்பற்றை சேர்ந்த 21 வயது இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் வந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









