Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சந்தேக நபர் என நினைத்து வேறு ஒருவரை தாக்கிய பொரளை பொலிஸ்

சந்தேக நபர் என நினைத்து வேறு ஒருவரை தாக்கிய பொரளை பொலிஸ்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸாரால் வரையப்பட்ட ஓவியத்துடன், ஒப்பிட்டு வேறு ஒரு நபர் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொரளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தம்மைத் தாக்கியதாக தெரணியகல பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர் தெரணியகல பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் என தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் 30ஆம் திகதி இரவு கொஹூவல, போதியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், பொலிஸ் ஓவியக் கலைஞர்களினால் வரையப்பட்ட சந்தேக நபரின் மாதிரி படம் ஒன்றையும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த சூழலில், தெரணியகல பகுதியில் சிறிய உணவகம் நடத்தும் லஹிரு மதுசங்க என்பவர், தனது வியாபாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த ஜனவரி முதலாம் திகதி கொழும்புக்கு வந்திருந்தார்.

அன்று இரவு பேஸ்லைன் வீதியிலுள்ள தமது மனைவியின் வீட்டில் தங்கியிருந்தபோது, அடுத்த நாள் காலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த வீட்டிற்கு பிரவேசித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தனது விருப்பத்தின் பேரில் வாக்குமூலம் அளிப்பதற்காக பொரளை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, சந்தேக நபரின் வரைபடத்தைக் காட்டி பொலிஸார் தன்னைத் தாக்கியதாக அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுமார் 2 நாட்கள் பொரளை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லஹிரு, கடந்த 3ஆம் திகதி பிற்பகலே விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்ததாவது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

எனினும், அந்த இளைஞரைத் தாக்கியதாக பொலிஸார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
நாளை முதல் க.பொ.த உயர்தர மேலதிக வகுப்புகளுக்கு தடை; பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாளை முதல் க.பொ.த உயர்தர மேலதிக வகுப்புகளுக்கு தடை; பரீட்சை ஆணையாளர் நாயகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.