Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்;பல திணைக்களங்கள் இணைந்து முன்னெடுப்பு

மட்டு நகரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்;பல திணைக்களங்கள் இணைந்து முன்னெடுப்பு

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக தூய்மையான நகரம் ஆரோக்கியமான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் மூன்று நாள் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம்,மண்முனை வடக்கு பிரதேச செயலகம், சமுர்த்தி திணைக்களம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என பல்வேறு திணைக்களங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தேவநேசன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார உட்பட மாநகரசபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்றைய தினம் ஆரோக்கிய சூழலுக்கான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.

மாமாங்கம், கல்லடி, நாவற்குடா ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகள் கைவிடப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான பிளாஸ்டிப்பொருட்கள், கொள்கலன்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றினை தூய்மைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த செயற்றிட்டத்தின் முதல்நாள் நிகழ்வாக இன்றைய தினம் வீடுகளும் அதனை அண்டிய சூழலும் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், நாளைய தினம் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் நாளை மறுதினம் திணைக்களங்களை உள்ளடக்கியதான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நகரினை தூய்மைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப் இந்த வேலைத்திட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குவதுடன் தூய்மைப்படுத்தும் பகுதிகளை தொடர்ந்து தூய்மையாக பேணுவதற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

வெள்ளத்தின் பின்னரான டெங்கு தாக்கங்கள் அதிகரிக்கும் நிலைமைகள் காணப்படுவதன்காரணமாக மாநகரசபை மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
கிண்ணியாவில் வீதிகளில் திரியும் மாடுகள் பிடிப்பு ;உரிமையாளர்களுக்கு நகர சபை கடும் எச்சரிக்கை!

கிண்ணியாவில் வீதிகளில் திரியும் மாடுகள் பிடிப்பு ;உரிமையாளர்களுக்கு நகர சபை கடும் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.