Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கஞ்சா, ஐஸ், பாபுல், ஹெரோயின் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சாரதிகள் இனி தப்ப முடியாது

கஞ்சா, ஐஸ், பாபுல், ஹெரோயின் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சாரதிகள் இனி தப்ப முடியாது

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் பாதுகாப்பான, விபத்துகள் இல்லாத மற்றும் போதைப்பொருள் அற்ற பொது போக்குவரத்து சேவையை உருவாக்கும் நோக்கில், பொது போக்குவரத்து சாரதிகளுக்கான புதிய போதைப்பொருள் பரிசோதனை திட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை மட்டக்குளிய அரச பேருந்து டிப்போவில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஒரு மொபைல் மருத்துவ ஆய்வு வாகனம் பயன்படுத்தப்பட்டு, பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களிடமிருந்து சிறுநீர் மாதிரிகள் பெறப்படுகின்றன.

இந்த நவீன பரிசோதனை முறையின் மூலம், கஞ்சா (Cannabis), ஐஸ் (Ice), பாபுல் (Babul), ஹெரோயின் (Heroin)
என நான்கு வகையான ஆபத்தான போதைப்பொருட்கள் உடலில் இருப்பதை கண்டறிய முடியும்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த பரிசோதனைகளின் முடிவுகள் 10 நிமிடங்களுக்குள் உடனடியாக வழங்கப்படுகின்றன.

இந்த திட்டம் கூடிய விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் கே.எஸ்.எம். சமரசேகர கருத்து தெரிவித்ததுடன், நேற்றைய போக்குவரத்து சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான சபை விவாதத்தில், இனி மதுபானம் மாத்திரமன்றி வேறு போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளையும் சோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் போக்குவரத்து சட்ட ஒழுங்கு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
செய்திகள்

2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

August 1, 2026
யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
Next Post
வைத்தியர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வைத்தியர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு