Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பியகம பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த நபர் கூரிய ஆயுதத் தாக்குதலில் கொலை

பியகம பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த நபர் கூரிய ஆயுதத் தாக்குதலில் கொலை

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (09) இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர், முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் பியகமை பகுதியில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்துள்ளார்.

அவர் தங்கியிருந்த அறைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிவதைக் கண்டு, அவர் அறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

இதன்போது, முகத்தை மூடியவாறு வந்த இருவர் கூர்மையான ஆயுதங்களால் அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது சடலம் முல்லேரியா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலையைச் செய்த சந்தேகநபர்களோ அல்லது கொலைக்கான காரணமோ இதுவரை கண்டறியப்படவில்லை.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

June 17, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

June 17, 2026
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!
செய்திகள்

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

June 17, 2026
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
Next Post
சோளம் ஏற்றிச்சென்ற லொரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

சோளம் ஏற்றிச்சென்ற லொரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு