Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமைச்சர் லால் காந்த பௌத்த மத தலைவர்களை அவமதித்துள்ளார்; சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ஆவேசம்

அமைச்சர் லால் காந்த பௌத்த மத தலைவர்களை அவமதித்துள்ளார்; சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ஆவேசம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமைச்சர் கே.டி.லால்காந்த, 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தை மீறி பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் அவமதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி, வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரரை அண்மையில் ‘காட்டுமிராண்டி’ என விழித்து அவமதித்துள்ளதாகவும், இவ்வாறு பௌத்த மதத் தலைவரொருவரை அவமதிப்பதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சட்டத்தில், “யாரும் போரைப் பரப்புவதோ அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுவதோ கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், லால்காந்த இதில் மதத் துவேஷத்தைப் பரப்பியிருப்பது புலப்படுவதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், பௌத்த தலைவர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அவதூறுகள் மற்றும் மதத் துவேஷத்தைப் பரப்புவது தொடர்பில் இச்சட்டத்தின் கீழ் லால்காந்தவுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை என்ன என்று தான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாதாரண பிரஜை ஒருவரோ அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரோ இவ்வாறு சட்டத்தை மீறியிருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும், லால்காந்த மதத் துவேஷத்தைப் பரப்பியது மற்றும் மகா சங்கத்தினரை அவமதித்தது குறித்து அரசாங்கம் மௌனம் காப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சர் லால் காந்த எந்தவொரு தனிநபரது பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. ஆனால் சில ஊடகங்கள் எதற்காக மஹிந்தலை விகாரையின் விகாராதிபதியை இதற்குள் உள்வாங்கின என்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.

இதன் போது அமைச்சர் லால் காந்த நிகழ்வொன்றில் ஆற்றிய உரை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைச்சர் லால் காந்த ‘மஹிந்தலை’ என விளித்துக் கூறினாரே தவிர, அங்கு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அது அவரது தொகுதியாகும். அங்கு சுமார் 75,000 வாக்காளர்கள் உள்ளனர்.

அவர்களில் எந்தவொரு தனிநபரையும் அவர் கூறவில்லை. சில ஊடகங்களே அவ்வாறு கூறுகின்றன. லால்காந்த கூறாத ஒரு விடயத்தையே ஊடகங்கள் கூறிக் கொண்டிருக்கின்றன.

மஹிந்தலை விகாரையின் விகாராதிபதியை எதற்காக இதற்குள் ஊடகங்கள் உள்வாங்கின என்பது எமக்கும் அதிர்ச்சியளிக்கிறது.

மிஹிந்தலையிலுள்ள 75,000 வாக்காளர்கள் குறித்து அமைச்சர் லால்காந்த நன்கு அறிவார். அவர்களில் ஒருவரை மனதில் கொண்டு அவர் அவ்வாறு தெரிவித்திருக்கலாம். அது யார் என்பதை அவரிடமே கேட்க வேண்டும். மாறாக அவர் மஹிந்தலை விகாரையின் விகாராதிபதியை தான் அவ்வாறு விளித்தார் என ஊடகங்கள் ஊகிப்பது பொறுத்தமற்றது என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
Next Post
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் முடக்கம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் முடக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.