Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் முடக்கம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் முடக்கம்

9 months ago
in செய்திகள்

முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 புதிய வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த ஆறு மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், தமக்கு ஏற்பட்டுள்ள பாரிய நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.

வாகனத்தின் உண்மையான விலையை விட மூன்று மடங்கு அதிகமான வரியைச் செலுத்துமாறு சுங்கத் திணைக்களம் கோருவதாக இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சில வாகனங்களுக்கு 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பிறகு, நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய வரித் திருத்தங்கள் மற்றும் மேலதிக தண்டப்பணங்கள் (சுமார் 50 வீத கூடுதல் வரி) காரணமாகவே இந்தச் சிக்கல் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வாகன வியாபாரிகள் அல்லர், மாறாகத் தமது வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்தி குடும்பத் தேவைக்காக எல்லைத் தாண்டிய கடன் கடிதங்கள் முறையின்கீழ் வாகனங்களை இறக்குமதி செய்த சாதாரண பொதுமக்களாவர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா, இந்த வாகனங்கள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எல்லைத் தாண்டிய கடன் கடிதங்கள் தொடர்பான வழக்குடன் தொடர்புடையவை என்று தெரிவித்தார்.

தற்போது உரிமையாளர்களுக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. சாதாரண வரியைச் செலுத்தி வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஆனால், நீதிமன்ற வழக்கு முடியும் வரை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனத்தைப் பதிவு செய்ய முடியாது. விதிமுறைகளை மீறியதற்கான தண்டப்பணத்தைச் செலுத்தி, உடனடியாக வாகனத்தைப் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய சூறாவளி காரணமாகத் துறைமுகத்தில் உள்ள வாகனங்கள் சேதமடைந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

“நாங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றினோம், ஆனால் இப்போது தண்டிக்கப்படுகிறோம்” என வேதனை தெரிவிக்கும் உரிமையாளர்கள், இவ்விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலையிட்டு தமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
Next Post
விமல் வீரவன்சவைக் கைது செய்ய உத்தரவு

விமல் வீரவன்சவைக் கைது செய்ய உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.