Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை 11.57% ஆல் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 முதல் காலாண்டிற்கான கட்டணத் திருத்த முன்மொழிவை கடந்த வருடம் நவம்பர் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஒக்டோபர் மாதமே அறிவுறுத்தப்பட்டது.

எனினும், மின்சார சபை தனது முன்மொழிவை 2025 டிசம்பர் 29 ஆம் திகதியே சமர்ப்பித்தது. சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில் தவறுகள் இருந்ததால், அவற்றைச் சீர்செய்து 2026 ஜனவரி 8 ஆம் திகதிக்குள் புதிய முன்மொழிவை வழங்குமாறு ஆணைக்குழு கடந்த 5 ஆம் திகதி கோரியது.

ஆனாலும், திருத்தப்பட்ட முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் மேலும் தாமதமாகும் என ஜனவரி 8 ஆம் திகதி மின்சார சபை அறிவித்தது.

திருத்தப்பட்ட முன்மொழிவு இன்னும் கிடைக்காத நிலையில், அது கிடைத்த பின்னர் பொதுமக்களின் கருத்துக்கேட்பு மற்றும் மீளாய்வு போன்ற பணிகளை முடிப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும். காலாண்டின் எஞ்சியிருக்கும் குறுகிய காலப்பகுதிக்காகக் கட்டணங்களை மாற்றியமைத்தால், சதவீத அடிப்படையில் கட்டணங்கள் பெருமளவு மாறுபடக்கூடும்.

இது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதால் தற்போதைய கட்டணத்தை மாற்றாமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவை 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
Next Post
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் போர் அவசர நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் போர் அவசர நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு