Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பற்றியெரிந்த ஹொட்டேல்; திட்டமிட்ட சம்பவம் என வர்த்தகர் சந்தேகம்!

மட்டக்களப்பில் பற்றியெரிந்த ஹொட்டேல்; திட்டமிட்ட சம்பவம் என வர்த்தகர் சந்தேகம்!

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் தீவிபத்தில் தனது வர்த்தக நிலையம் எரிந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் பொலிஸாரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதது கவலைக்குரியது என மட்டக்களப்பு நகர் வர்த்தகர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்த எனது ஹோட்டல் தீப்பிடித்து எரிந்தது. இதன்போது கோடிக்கனக்கில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த தீவிபத்து தொடர்பில் எனது ஹோட்டலில் பணியாற்றியவர்களே எனக்கு தகவல் தந்தார்கள். நான் ஆரம்பத்தில் இது ஒரு மின் ஒழுக்காக இருக்கும் என்றே கருதினோம். ஆனால் எனது வர்த்தக நிலையத்தில் கடமையாற்றியவர்கள் தெரிவித்த முரண்பட்ட கருத்துகள் எனக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியது.

இதன்போது எனது வர்த்தக நிலையத்தில் கடமையாற்றியவர்கள் தங்கியிருந்த வர்த்தக நிலையத்தின் சீசீரிவி கமராவினை பரீசோதனை செய்தபோதுஅவர்களின் கருத்துகள் எனக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இது தொடர்பில் நவம்பர் மாதம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் சென்று குறித்த சீசீரிவி காட்சிகள் அடங்கிய இறுவெட்டுகளை வழங்கியிருந்தேன். இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கூறியிருந்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.

வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தானது மின்னொளுக்கினால் ஏற்பட்டதாக மின்சாரசபை அறிக்கை தந்ததாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நான் மின்சாரசபைக்கு சென்று அதன் பொறியியலாளரிடம் கேட்டபோது தாங்கள் எந்த அறிக்கையினையும் வழங்கவில்லையென தெரிவிக்கின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர், ஜனாதிபதி செயலகங்களுக்கும் அறிவித்துள்ளேன்.

எனது ஹோட்டல் எரிக்கப்பட்ட சம்பமானது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடாகவே இருக்கும் என்ற சந்தேகம் பலமாகவுள்ளது. இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
Next Post
ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் பட்டிப்பொங்கல் விழா

ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் பட்டிப்பொங்கல் விழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.