கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள நிட்டம்புவ என்னும் பகுதியில் சுமார் ரூ.900 மில்லியன் மதிப்புள்ள 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபரது முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








