Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பானிலுள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானிலுள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

7 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஃபுக்குஷிமா அணுமின் ஆலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன.

இயற்கை எரிவாயு வளங்கள் அற்ற ஜப்பானின் மின்சாரத் தேவைகளுக்காக அங்குள்ள அணுமின் நிலையங்களை மீண்டும் இயக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதுடன் வடக்கு மற்றும் தெற்கு ஜப்பானில் உள்ள சுமார் 13 அணுமின் நிலையங்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் உள்ள காஷிவாசாகி-கரிவா ஆலை இன்று (21) முதல் மீண்டும் இயக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணுமின் நிலையத்தை இயக்குவதற்கு நிகாட்டா மாகாண ஆளுநர் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆலை இயக்கப்படுவதற்கு நிகாட்டாவின் 60 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நிகாட்டா மாகாணத்தில் பெய்யும் கடும் பனிப்பொழிவிலும் ஏராளமான மக்கள் காஷிவாசாகி-கரிவா ஆலையின் இயக்கத்தை எதிர்த்து அதன் நுழைவு வாயிலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
Next Post
கடந்த 10 ஆண்டுகளில் 8.77 இலட்சம் தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளது; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளில் 8.77 இலட்சம் தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளது; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு