Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்தர்களின் வேள்வி நிகழ்வில் ஊடகவியலாளருக்கு சிறப்பு பாராட்டு!

சித்தர்களின் வேள்வி நிகழ்வில் ஊடகவியலாளருக்கு சிறப்பு பாராட்டு!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சித்தர்களின் குரல் சமஸ்தானத்தினால் ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய “சாமஸ்ரீ தேசமானிய” உ.உதயகாந்திற்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வேலோடு மலையில் பதினெண் சித்தர்கள் சன்னிதியில் சாபநிவர்த்தி செய்து பெறப்பட்ட சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி நேற்று முன்தினம் (20) திகதி இரவு நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் குழுவினரின் தலைமையில் சித்தர்களின் குரல் சமஸ்தானத்தின் சர்வதேச ஆலோசகர் சிவசங்கர் ஜீ அவர்களின் ஏற்பாட்டில் மூலிகை குளியலுடன் ஆரம்பமாகி, 18 சித்தர்கள் சந்நிதியில் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, யோக ஆற்றல்களை கூட்டும் சத்ரு சம்ஹார வேல் பூஜை என்பன இடம்பெற்றது.

வேலோடுமலை முருகன் ஆலயத்தின் தர்மகர்த்தா தியாகராஜ சுவாமிகள் மற்றும் சித்தர்களின் குரல் சமஸ்தானத்தின் இலங்கைக்கான தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர் மனோகரன், போசகர் மகேஸ்வரன் சுவாமிகள், நமசிவாயம் சுவாமி, வேல் சுவாமி, சித்தர்களின் குரல் ஊடகவியலாளர் விபுலமணி சகாதேவராஜா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பூசை வழிபாடுகள் மிக சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது சித்தர்கள் குரல் சமஸ்தானத்தினால் உலகப்புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களது அளப்பரிய கலைச்சேவையினையும், வேலோடுமலை முருகன் ஆலயத்தின் தர்மகர்த்தா தியாகராஜ சுவாமிகளின் அளப்பரிய சேவையினையும், சித்தர்களின் குரல் ஊடகவியலாளர் விபுலமணி சகாதேவராஜா மற்றும் ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமாகிய உ.உதயகாந்த் ஆகியோரின் சேவையினையும் பாராட்டி, பொன்னாடை போர்த்தப்பட்டு, மலர் மாலை அணிவித்து, ஆன்மீக ரீதியான நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
செய்திகள்

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

September 15, 2026
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
Next Post
வடகிழக்கு உட்பட பல பகுதிகளில் நாளை முதல் கனமழை!

வடகிழக்கு உட்பட பல பகுதிகளில் நாளை முதல் கனமழை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு