இலங்கை பத்திரிகை நிறுவனம் மற்றும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம் இணைந்து வருடாந்தம் வழங்கும் 26ஆவது தேசிய ரீதியிலான சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (20) Empire Ballroom Mount Lavinia யில் நடைபெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ், “மட்டு. துஷாரா” என்ற புனைப்பெயரில் தமிழன் வாராந்த ஹெல்த் சஞ்சிகையில் மருத்துவம் தொடர்பாக கடந்த ஆண்டு தொடராக எழுதிய கட்டுரைகளுக்காக மருத்துவ கட்டுரைக்கான சிறந்த பத்திரிகையாளர் விருது மற்றும் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு கௌரவிக்கப்பட்டார்.
.

இந்த விருதை வீரகேசரி பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் சிறி கஜன் வழங்கி வைத்தார்.
மேலும் குறிப்பிடத்தக்கது என்னவெனில், கடந்த 2022 ஆம் ஆண்டிலும், இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தேசிய சிறந்த பத்திரிகையாளர் விருதில், தொடர்ச்சியான சிறந்த மருத்துவ கட்டுரைகளுக்காக மட்டு. துஷாரா இதே விருதைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








