Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவை அழைத்த டிரம்ப் தற்போது அழைப்பை இரத்து செய்தார்

கனடாவை அழைத்த டிரம்ப் தற்போது அழைப்பை இரத்து செய்தார்

8 months ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள்

உலக அளவில் போர்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்துள்ள புதிய சர்வதேச அமைதி முயற்சியான “Board of Peace” அமைப்பில், கனடாவை இணைக்க வழங்கப்பட்டிருந்த அழைப்பை அவர் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார்.

இந்த தீர்மானம், சுவிட்சர்லாந்து டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டின் பின்னர் வெளியாகியுள்ளது. டிரம்ப் தனது ட்ருத் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அவர்களுக்கான அழைப்பு இனி செல்லாது என அறிவித்துள்ளார்.

டிரம்ப் அறிமுகப்படுத்திய இந்த “Board of Peace” அமைப்பு என்பதை உலக நாடுகளுக்கிடையிலான மோதல்களை தீர்ப்பது, குறிப்பாக காசா (Gaza) பிராந்தியத்தின் நிர்வாகம் மற்றும் மீள்கட்டமைப்பை கண்காணிப்பது என்ற நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக சேரும் நாடுகள், ஒவ்வொன்றும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி, டாவோஸ் மாநாட்டுக்கு முன்னர், இந்த அமைப்பில் சேர்வதை கொள்கை ரீதியில் (in principle) ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால்,அமைப்பின் கட்டமைப்பு, நிதி நிர்வாகம்செயல்பாட்டு முறைகள் போன்ற விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

தனைத் தொடர்ந்து, கனடாவின் நிதி அமைச்சர், 1 பில்லியன் டொலர் செலுத்த கனடா திட்டமிடவில்லை என வெளிப்படையாக அறிவித்தார்.

சிந்தனையில் Davos மாநாட்டில் உரையாற்றிய மார்க் கார்னி, “அமெரிக்கா தலைமையிலான rules-based உலக ஒழுங்கு தற்போது முறிவடைந்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், “கனடா அமெரிக்காவால் தான் வாழ்கிறது”
என்று விமர்சித்தார்.

இதற்கு கார்னி, “கனடா அமெரிக்காவால் வாழவில்லை; கனடியர்களாக இருப்பதால்தான் வளமாக இருக்கிறோம்” என்று பதிலளித்தார்.

இந்த கருத்து மோதல்களின் பின்னணியிலேயே, கனடாவுக்கான Board of Peace அழைப்பு வாபஸ் பெறப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த அரசியல் பதற்றத்திற்கு பின்னர் இந்த அமைப்பில் தற்போது அர்ஜென்டினா, பாக்ரைன், மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் இணைந்துள்ளன.

அதேவேளை, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல அமெரிக்க கூட்டணி நாடுகள்,
இந்த அமைப்பில் சேரவில்லை என தெரிவித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
Next Post
கல்வித் துறையை ஆபாசமயமாக்கும் செயற்பாடு 2015ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது; பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

கல்வித் துறையை ஆபாசமயமாக்கும் செயற்பாடு 2015ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது; பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.