ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியை எவ்வாறு பெற்றார் என்பதை வெளிப்படுத்தாத காரணத்தினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தேசமயம் இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.








