மட்/ககு/ பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை இணைக்கும் கால்கோள் விழா பாடசாலை அதிபர் திரு. க. கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கோறளைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளரும், கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திரு. அ. ஜெயக்குமணன், பாடசாலை EPSI இணைப்பாளர் திரு. M. விஜிலியஸ், ஆசிரிய ஆலோசகர் திருமதி செள. அருளேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.









மேலும் HNB வங்கி முகாமையாளர், மக்கள் வங்கி மற்றும் வங்கிக் கூட்டுறவு (BOC) உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு (பா.அ.நி.) செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக, கெளரவ பிரதம மந்திரியும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களது வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் கல்வி வாழ்க்கைக்கு நல்ல தொடக்கமாக அமைந்த இந்நிகழ்வு அனைவரின் பாராட்டையும் பெற்றது.








