Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு கல்வி உதவிகளை வினைத்திறனுடன் பயன்படுத்த கல்வி அமைச்சும் டிஜிட்டல் செயலணியும் இணைந்து செயல்பட வேண்டும்; பிரதமர்

வெளிநாட்டு கல்வி உதவிகளை வினைத்திறனுடன் பயன்படுத்த கல்வி அமைச்சும் டிஜிட்டல் செயலணியும் இணைந்து செயல்பட வேண்டும்; பிரதமர்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாட்டு கல்வி உதவிகளை மாணவர்களின் நலனுக்காக மிகுந்த வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கு, க​ல்வி அமைச்சும் டிஜிட்டல் மயமாக்கல் செயலணியும் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

​நவீன டிஜிட்டல் உபகரணங்களைக் கையாளுவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான மனிதவளத்தைப் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 

ஹுவாவே நிறுவனம் மற்றும் யுனெஸ்கோ கிராமப்புற கல்விக்கான சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

​

​சமமான பகிர்ந்தளிப்பு: வெளிநாட்டு உதவிகளாகக் கிடைக்கப்பெறும் டிஜிட்டல் உபகரணங்களை, முறையான வழிமுறையூடாக அனைத்துப் பாடசாலைகளுக்கும் சமமான முறையில் பகிர்ந்தளிப்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.

நவீன டிஜிட்டல் உபகரணங்களை முறையாகக் கையாளுவதற்கான திறன், தற்போது ஆசிரியர் பயிற்சிகள் ஊடாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ​பாதுகாப்பான பயன்பாடு உபகரணங்களை வினைத்திறனாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதற்கான மனிதவளம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

​மாணவர்களின் வயது மற்றும் தரங்களுக்கு ஏற்ப, டிஜிட்டல் உபகரணப் பயன்பாட்டின் எல்லையை நிர்ணயிக்கும் சிறுவர் பாதுகாப்பு முறையினூடாகப் பிள்ளைகளுக்கு டிஜிட்டல் கல்வி பெற்றுக்கொடுக்கப்படும்.

​கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026.01.27 அன்று ‘இசுருபாய’ கல்வி அமைச்சில் ஹுவாவே நிறுவனம் மற்றும் யுனெஸ்கோ கிராமப்புற கல்விக்கான சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

​இதன்போது, மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் ஷாவ் ஷூயி ( Zhao Shouyi), இலங்கையின் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்காகக் கவனம் செலுத்தப்பட்டுள்ள பிரதான துறைகள் குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தார்.

​ஹுவாவே மற்றும் யுனெஸ்கோ நிறுவனங்கள் இணைந்து கல்வி அமைச்சின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுடன் ஒன்றிணைந்து, இலங்கையின் கிராமப்புறக் கல்வியை மேம்படுத்துவதற்காகத் தேவையான ‘ஊடாடும் திரைகள் உள்ளிட்ட ஸ்மார்ட் வகுப்பறை டிஜிட்டல் சாதனங்களை வழங்கவுள்ளன. அத்துடன், ஆசிரியர்களுக்கு நவீன டிஜிட்டல் கற்பித்தல் முறைகள் குறித்த விசேட பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கும் சீனத் தரப்பு தயாராக இருப்பதாக பேராசிரியர் ஷாவ் ஷூயி விளக்கியுள்ளார். 

கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் பிரதமர் காட்டும் தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் அவர் இதன்போது பாராட்டினார். ​சீன அரசாங்கத்தினால் இந்த வேலைத்திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் தேசிய கல்வி டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டங்கள் ஊடாக, இலங்கையின் கல்வித்துறைக்கு வழங்கப்படுகின்ற ஒத்துழைப்புக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

​இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, யுனெஸ்கோ சர்வதேச மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஷாவ் ஷூயி, திருமதி லியு தியான்யி, ஹுவாவே டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சமூக விவகார தொடர்பாடல் பணிப்பாளர் ராவ் யுவான்ஜுன், மூலோபாய பணிப்பாளர் இந்திக டி சொய்சா, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சாவித்திரி பானபொக்க, உதவிப் பணிப்பாளர் இசுரி விதாரண, யுனெஸ்கோ இலங்கைக்கான தேசிய அலுவலகத்தின் செயலாளர் நாயகம் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க உள்ளிட்ட பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.