Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி நாளை கண்டி விஜயம்; ‘டித்வா’ இழப்பீடு, அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!

ஜனாதிபதி நாளை கண்டி விஜயம்; ‘டித்வா’ இழப்பீடு, அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

‘டித்வா’ சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாளை கண்டியில் நடைபெறவுள்ளன.

அதன்படி, ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்விலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த கைத்தொழிற்துறையினர்களுக்கும், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு குண்டசாலை மத்திய மாகாண சபை மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

டித்வா சூறாவளியினால் தொழிற்சாலைகள் அல்லது இயந்திர உபகரணங்கள் சேதமடைந்தவர்கள், தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இழப்பீட்டுத் தொகையாக தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

சிறு, நடுத்தர அல்லது பாரிய அளவிலான கைத்தொழில்கள் என்ற வேறுபாடின்றி, பதிவு செய்யப்பட்ட அனைத்து வர்த்தகங்களுக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

அத்தோடு கண்டி மாவட்டத்தில் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 இலட்சம் ரூபாயில், முதல் தவணையாக தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் இதன்போது வழங்கப்படும்.

தமக்குச் சொந்தமான காணியில் வீடு கட்டுபவர்கள் அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணியில் வீடு கட்டுபவர்கள் இதில் அடங்குவர்.

அத்துடன், சூறாவளியினால் வீடுகளை இழந்த மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கான காணி வழங்கல் மற்றும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு நாளை (06) பிற்பகல் நியாங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

பகுதியளவில் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் விரைவான நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. அத்துடன், புதிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி இணைந்து கொள்வார்.

அத்தோடு, கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் (A-009) அமைந்துள்ள மகைய்யாவ சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளையும் நாளை முற்பகல் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மேலும், இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பால நிர்மாணப் பணிகளும் ஜனாதிபதி தலைமையில் நாளை(06) மீண்டும் தொடங்கி வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.