Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உணவக உணவுகளின் விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலை; இப்படிக்கூறுகிறது அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம்

உணவக உணவுகளின் விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலை; இப்படிக்கூறுகிறது அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது தற்போதைய ஜனாதிபதி ஒரே எரிவாயுவுக்கு நிறத்தை மாற்றி ஏன் இரண்டு விலைகள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் இன்று அவரே ஆட்சியில் இருக்கும் போது நீல நிற எரிவாயு ஒரு விலையிலும் மஞ்சள் நிற எரிவாயு அதிக விலையிலும் விற்பனை செய்யப்படுவது ஏன்? என்று நாம் கேட்க விரும்புகிறோம்.

எரிவாயு மாத்திரமன்றி சந்தையில் கீரி சம்பாவுக்கு 260 ரூபாகட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அது 340 ரூபா வரை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றது.

கோழி இறைச்சி தேங்காய் எண்ணெய் மற்றும் மீன் வகைகளின் விலைகளும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி உயர்ந்துள்ளன. வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தூக்கத்தில் இருக்கிறாரா அல்லது இந்த திருட்டுகளுக்கு உடந்தையாக இருக்கிறாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பெரும் நட்டத்தையே சந்தித்து வருகின்றனர். ஒருபுறம் எரிவாயு விலையேற்றம் மறுபுறம் மூலப்பொருட்களின் அதீத விலை உயர்வு என இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளோம்.

இந்த நிலை தொடருமானால் நுகர்வோர் மீது சுமையை ஏற்ற விரும்பாத போதிலும் எமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்காக உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

தற்போதைய அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் சந்தையில் நிலவும் இந்த விலை மோசடிகளைத் தடுக்கத் தவறிவிட்டனர். மக்களையும் வர்த்தகர்களையும் பாதுகாக்க முடியாத ஒரு அரசாங்கம் எதற்கு? ஜனாதிபதி அன்று மேடைகளில் பேசிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.

முறையான விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை ஒன்றை அமுல்படுத்தத் தவறினால் எமது சங்கத்தினர் இணைந்து கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு – எம்.பிகளின் வரப்பிரசாதங்கள் இரத்து; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு - எம்.பிகளின் வரப்பிரசாதங்கள் இரத்து; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.