Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு; 10 பேர் உயிரிழப்பு

கனடாவில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு; 10 பேர் உயிரிழப்பு

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலைக்குள் நேற்று பகல் வேளையில் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், சம்பவ இடத்திலேயே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பாடசாலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றுமொரு சம்பவம் அருகில் உள்ள வீடொன்றிலும் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தாக்குதலின் பின்னணியில் உள்ள திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவம் நடந்த உடனே அப்பகுதியில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர்கள் மற்றும் அம்யூலன்ஸ் மூலம் அவசரமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி, தாக்குதல்தாரி பழுப்பு நிற முடி மற்றும் அதே நிறத்திலான ஆடையை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. கனடா வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
Next Post
அகமதாபாத் முதல் கொழும்பு வரை புதிய நேரடி விமான சேவை ஏப்ரலில் ஆரம்பம்

அகமதாபாத் முதல் கொழும்பு வரை புதிய நேரடி விமான சேவை ஏப்ரலில் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு