Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறித்த குழுவின் கூட்டத்தில் இந்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்தார்.

“அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தில் நாம் முன்வைத்த ஒரு முக்கிய விடயமே, சில வருடங்கள் பாராளுமன்றத்தில் பதவி வகித்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் இந்த ஓய்வூதிய முறையை ரத்துச் செய்வதாகும். இதன்படி, தற்போது நடைமுறையிலுள்ள 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியச் சட்டமானது, இந்தப் புதிய சட்டத்தின் ஊடாக இல்லாதொழிக்கப்படும்.

அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இது நிறைவேற்றப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித ஓய்வூதியமும் கிடைக்காது. அதன் பின்னர், அரசியலை ஒரு மக்கள் சேவையாக மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். அரசியல் கலாசார ரீதியாகவும், தேர்தலுக்கு முன்னர் நாம் வழங்கிய வாக்குறுதிகள் ரீதியாகவும் இது மிகவும் முக்கியமான ஒரு படியாகும் என நாம் கருதுகிறோம். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக, நாம் எத்தகைய பாதையில் பயணிக்கிறோம் மற்றும் நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்கிறோம் என்பது குறித்த உறுதியான செய்தியை மக்களுக்கு வழங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.”

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
Next Post
ஆடியம்பலம பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஊழியர் ஒருவர் தீக்காயம்

ஆடியம்பலம பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஊழியர் ஒருவர் தீக்காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு