Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர்ப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மக்கள் பாதுகாப்பு, கல்வி, மனித–யானை மோதல் குறித்து கவனம்

ஏறாவூர்ப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மக்கள் பாதுகாப்பு, கல்வி, மனித–யானை மோதல் குறித்து கவனம்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

Facebookஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில், ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13.02.2026) பிரதேச செயலக மண்டபத்தில், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க. பிரபு தலைமையில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. ஶ்ரீநேசன், வைத்தியர் இ. சிறிநாத், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர் முரளிதரன், அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நேரடி களவிஜயத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஶ்ரீநேசன் கருத்துகளை முன்வைத்தார். அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவப்பட்டபோது, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். கல்வி தொடர்பான விவாதத்தில், கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஈரளக்குளம் பாடசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக கல்வி அதிகாரியுடன் கருத்துக்கள் பகிரப்பட்டன.

மேலும் மனித–யானை மோதல் தொடர்பில், வாழைச்சேனை பகுதியில் யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து மூவர் படுகாயமடைந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், யானைகளை காட்டுப் பகுதிகளுக்குள் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த வன ஜீவராசி திணைக்களத்தின் மேல் அதிகாரி, ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், யானைகளை காட்டிற்குள் கொண்டு செல்ல விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதேசமயம் கருமாரியம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வியாபார நிலையம் அமைப்பது மக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு, குறித்த திட்டத்தை கைவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
அக்குரேகொட துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர்கள் பயணித்த கார் எரிந்த நிலையில் மீட்பு

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர்கள் பயணித்த கார் எரிந்த நிலையில் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு