Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம்நேற்று (15) விசேட பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தனது கண்டன அறிக்கையை வெளியிட்டது.

அத்துடன், சாய்ந்தமருது பகுதியில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டபோது, சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் நேரடியான அச்சுறுத்தலாகும் என வலியுறுத்தப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் திணைக்கள அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்தகைய கொடூரச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் ஆயுத கலாச்சாரத்தை முற்றாக ஒழித்து நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக முழுமையான, சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சட்டத்துறையின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தலைமையில் கொழும்பு நகரிலுள்ள சட்டத்தரணிகள் சங்க செயலகத்தில் அமைந்துள்ள கலாநிதி எச்.டபிள்யூ. ஜயவர்தன கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெறும் கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாதிருந்தாலும், அதற்கு தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதாக சம்மாந்துறை கிளை அறிவித்துள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா, உப தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நஸீல், செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம்.ஏ. சியாத், பொருளாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாமிலா மன்சூர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எச். அரூஸ் அடங்கலாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சம்மாந்துறை கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
நாட்டின் மலையாக பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டின் மலையாக பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு