Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் வாங்கிய மகனை வாளால் வெட்டிக் கொன்ற தந்தை!

வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் வாங்கிய மகனை வாளால் வெட்டிக் கொன்ற தந்தை!

7 months ago
in செய்திகள்

அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் பாவித்த மகனை, தந்தை வாளால் வெட்டிப் படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (18) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய 45 வயதுடைய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞர் நீண்டகாலமாகப் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருந்தார் எனவும், இதற்காக வீட்டிலுள்ள பெறுமதிமிக்க பொருட்களைத் திருடி விற்று வந்தார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை, வீட்டின் பொருளொன்றைத் திருடிக்கொண்டு தப்பிக்க முயன்ற மகனை, தந்தை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

மகன் பிடிபட்டதையடுத்து தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது மதுபோதையில் இருந்த தந்தை, ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த வாளால் மகனின் தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தந்தையிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
‘வடமாகாண முதலமைச்சர் சந்திரசேகர்-உள்ளூராட்சி அமைச்சர் இளங்குமரன்’

'வடமாகாண முதலமைச்சர் சந்திரசேகர்-உள்ளூராட்சி அமைச்சர் இளங்குமரன்'

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு