Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இது பூனை வளர்ப்பவர்களுக்கான அறிவிப்பு; கொடிய மரணத்தை ஏற்படுத்தும் நோய்

இது பூனை வளர்ப்பவர்களுக்கான அறிவிப்பு; கொடிய மரணத்தை ஏற்படுத்தும் நோய்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வருடம் நாட்டில் பதிவான நீர்வெறுப்பு நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு, வீதியோரங்களில் உள்ள கட்டாக்காலி நாய்கள் கடித்ததால் அல்லாமல், வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் கடித்ததாலேயே இந்நோய் பரவியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

நாய்கள், பூனைகள், அணில்கள், கீரிப்பிள்ளைகள் போன்ற விலங்குகள் கடிப்பதன் மூலம் பரவும் நீர்வெறுப்பு நோயானது ஒரு கொடிய நோயாகக் கருதப்படுகின்றது.

சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதற்கமைய, நாட்டில் வருடமொன்றுக்கு 250,000 முதல் 300,000 வரையான நாய் கடி சம்பவங்கள் மாத்திரம் பதிவாகின்றன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அத்துல லியனபத்திரன இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்:

“நீர்வெறுப்பு நோய் நூற்றுக்கு நூறு வீதம் ஒரு கொடிய மரணத்தை ஏற்படுத்தும் நோயாகும். உலகளாவிய ரீதியில் கூட மிகச் சிலரே நீர்வெறுப்பு நோயிலிருந்து உயிர் பிழைத்துள்ளனர். நாய்கள், பூனைகள், நரிகள், அணில்கள், மர அணில்கள், மரநாய்கள், கீரிப்பிள்ளைகள், மாடுகள், குதிரைகள் என இந்த எந்தவொரு விலங்கு கடித்தாலும் இது பரவலாம்.”

“விலங்குகளின் மூளை மாதிரிகளைப் பரிசோதிக்கும் போது பூனைகளிடையே நீர்வெறுப்பு நோய் அதிகரித்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது. பூனை கடி சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. குறிப்பாகக் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் பூனை கடி சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. பூனை கடி தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பூனையின் கீறல், அது கடிப்பதற்குச் சமமான அளவு ஆபத்தானது.”

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
Next Post
எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு பாதாள உலகைக் கட்டுப்படுத்துங்கள்; அநுர அரசிடம் நாமல் வலியுறுத்து

எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு பாதாள உலகைக் கட்டுப்படுத்துங்கள்; அநுர அரசிடம் நாமல் வலியுறுத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு