Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரியர் வெற்றிடங்களுக்கமைய ஆட்சேர்ப்பு தொடரும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் வெற்றிடங்களுக்கமைய ஆட்சேர்ப்பு தொடரும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும், நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமசூரியவின் தலைமையில் இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளை அடையாளம் காணுதல், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், பாதுகாப்பு மற்றும் பாடசாலைகளுக்குச் சொந்தமான காணி உரிமைகளை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், நிலவும் ஆசிரியர், அதிபர் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் தரம் 13 இல் கற்கும் மாணவர்கள் விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைகளில் பயில்வதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் தொழிற்கல்வியைத் தொடரும்போது நிலவும் மொழிப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

மேலும், ஆசிரியர் பயிற்சிகளின்போது தமிழ் மொழிமூல ஒத்துழைப்பை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மாவட்ட மட்டத்திலான தரவுகள் அவசியம் என்றும், ‘டிட்வா|| சூறாவளியினால் பாடசாலைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இப்பாடசாலைகளை மீள அமைக்கும்போது இடத்தின் பொருத்தப்பாடு குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இதற்கான தரவுகளை வினைத்திறனாகப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இந்தப் பெருந்தோட்டப் பாடசாலைகள் அனைத்தும் அரச பாடசாலைகளே. எனவே, எதிர்காலத்தில் இப்பாடசாலைகளை எவ்வாறு பெயரிட்டு அழைப்பது என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்’ எனப் பிரதமர் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்குத் தெளிவுபடுத்தி, அக்குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரதமர், இதன் மூலம் பாடசாலை அபிவிருத்திப் பணிகளை மிக நெருக்கமாகக் கண்காணிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் 23,000 பேரை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை ஓரளவுக்கு நிரப்ப முடியும் என எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், நிலவும் வெற்றிடங்களை முழுமையாக நிரப்பும் வகையில் வருடாந்தம் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
இலங்கை லொத்தர் வரலாற்றில் 62 கோடி வென்ற தனிநபர்

இலங்கை லொத்தர் வரலாற்றில் 62 கோடி வென்ற தனிநபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.