கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 1232 கடல் அட்டைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகள், சுழியோடல் உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சட்டவிரோதமான முறையில் இரவு வேளையில் சுழியோடி கடல் அட்டைகளை பிடித்த பத்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் கிளிநொச்சி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடல் அட்டைத் தொகுதி, டிங்கி படகுகள், சுழியோடல் உபகரணங்கள் ஆகியனவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.








