Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போரதீவுப் பற்று பிரதேச சபை சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்; தவிசாளர் அறிவிப்பு

போரதீவுப் பற்று பிரதேச சபை சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்; தவிசாளர் அறிவிப்பு

6 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு போரதீவுப் பற்று (வெல்லாவெளி) பிரதேச சபையின் 09வது அமர்வு இன்று (23) தவிசாளர் வி. மதிமேனன் தலைமையில் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக சபையில் முன்வைக்கப்படும் பிரேரணைகள் தொடர்ந்து எதிர்ப்பு மற்றும் நடுநிலை வாக்குகளால் நிறைவேறாமல் உள்ளதால், சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.

சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பான பல பிரேரணைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தலைமையிலான கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் 05 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததுடன், தேசிய மக்கள் சக்தி சார்பான 03 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் 08 பேரும் பிரேரணைகளை ஆதரித்தனர்.

மொத்தம் 16 உறுப்பினர்கள் கொண்ட சபையில் தேவையான ஆதரவு இல்லாத காரணத்தால் பிரேரணைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்களால் காரணங்கள் தெளிவாக முன்வைக்கப்படாததால், சபையின் சேவை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக தவிசாளர் குறிப்பிட்டார்.

இதனால், சபைக்குட்பட்ட 10 வட்டாரங்களில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகளை ஓரிரு வாரங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தும் கடினமான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்னர் சபையில் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் மற்றும் விளக்கங்கள் திருத்தப்படாததால் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சட்டத்தின் பதிலின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஆதரவு அல்லது எதிர்ப்பு குறித்து தீர்மானிக்கப்படுமெனவும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
Next Post
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு