“தற்போதைய அரசாங்கம் பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் புறக்கணித்துள்ளதாக ஒரு கருத்தை கட்டியெழுப்ப ஒரு குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒரு குழுவினர் ‘சங்க மாநாடு’ (சங்க சம்மேளனம்) ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த ஒரு வருட காலத்தில் அரசாங்கம் பௌத்த மதத்திற்காகவும் மகா சங்கத்தினருக்காகவும் உச்சகட்ட அர்ப்பணிப்பை செய்துள்ளதால், இத்தகைய போராட்டங்கள் நியாயமானவை அல்ல என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் வேறு அரசியல் நோக்கங்களை முன்னிறுத்தியே இதனைச் செய்கிறார்கள் என்றும் கமகெதர திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.”








