Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து; 07 பேர் உயிரிழப்பு

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து; 07 பேர் உயிரிழப்பு

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று திங்கட்கிழமை (23) மாலை ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

தேடுதல் பணிகளுக்குப் பின்னர், சத்ரா மாவட்டத்தின் சிமரியா பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நோயாளி, வைத்தியர்கள், உதவியாளர்கள் மற்றும் விமானிகள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானம், ராஞ்சியில் இருந்து மாலை 7:11 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.00 மணியளவில் டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

விபத்து நடந்த இடம் மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால், மீட்புக் குழுவினர் அங்கு சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (24) அனைத்து சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கோளாறினால் விமானம் தீப்பிடித்து விழுந்திருக்கலாம் என ஆ ரம்ப கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

சிவில் விமானப் போக்குவரத்து பணியகம் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அவசர சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளியும், அவருக்கு உதவச் சென்ற மருத்துவக் குழுவினரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதனால் நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அபாயம்; நிபுணர் எச்சரிக்கை!

தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதனால் நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அபாயம்; நிபுணர் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு