Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதனால் நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அபாயம்; நிபுணர் எச்சரிக்கை!

தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதனால் நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அபாயம்; நிபுணர் எச்சரிக்கை!

8 months ago
in செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியும் மின் உற்பத்தி நிலையத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், அடுத்த மாதம் (மார்ச்) முதலாம் திகதி முதல் முழுமையாகப் புதிய நிலக்கரியையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கலாநிதி விதுர ரலபனாவ குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது 10 – 16 மணித்தியாலங்கள் போன்ற ஒரு சிறு காலப்பகுதிக்கு மாத்திரமே தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் முந்தைய விநியோகஸ்தரால் கொண்டுவரப்பட்ட நிலக்கரி இன்னும் மின் உற்பத்தி நிலையத்தில் கையிருப்பில் உள்ளது.

ஆனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய தரப்பினரிடம் கேட்டால், மார்ச் 1 ஆம் திகதிக்குப் பிறகு அவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஏனெனில் பழைய நிலக்கரி தீர்ந்துவிடும் என்பதால், முழுமையாகப் புதிய நிலக்கரிக்கு மாற வேண்டியிருக்கும்.

இந்தத் தரமற்ற நிலக்கரியை 24 மணித்தியாலங்களும் பயன்படுத்தும்போது இயந்திரங்களுக்கு ஏற்படும் பாதிப்பே இங்குள்ள மிகப்பெரிய சிக்கலாகும். அவ்வாறு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு அல்லது மூன்று இயந்திரங்கள் சேதமடைந்தால், மழை இல்லாத இந்தக் காலத்தில் நாம் என்ன செய்வோம்? அப்படி நடந்தால் இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பிற்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தயவுசெய்து பொறியியலாளர்களைச் சந்தித்துச் சரியான முடிவை எடுங்கள். இதனைச் சரியாக முகாமைத்துவம் செய்யாவிட்டால், முழு நாட்டின் மின்சாரத் துறையின் பாதுகாப்பு இல்லாமல் போய், மின்சாரக் கட்டணத்தைப் பெருமளவில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!

October 30, 2026
வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!
செய்திகள்

வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!

October 30, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!

October 30, 2026
ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 30, 2026
ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!
செய்திகள்

ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!

October 30, 2026
மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு

October 30, 2026
Next Post
தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்; சுசில் ரணசிங்க

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்; சுசில் ரணசிங்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு