Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிவப்புக் கொடியை ஏற்றி பழிவாங்கப்படும் என அறிவித்தது ஈரான்

சிவப்புக் கொடியை ஏற்றி பழிவாங்கப்படும் என அறிவித்தது ஈரான்

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த கும் நகரில் உள்ள ஜம்கரான் மசூதியின் கோபுரத்தில் சிவப்பு நிற ‘பழிவாங்கும் கொடி’ ஏற்றப்பட்டது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இக்கொடி கமேனி ஆதரவாளர்களின் கோபத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டுவதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.

சிவப்பு நிறக் கொடி என்பது நீதியையும் பழிவாங்கலையும் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. தெஹ்ரானில் நடந்த அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு வான் வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனை ஈரானும் உறுதிப்படுத்தியுள்ளது.

கமேனி படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டது இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் என்று ஈரான் அதிபரும் கூறியுள்ளார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மிக உயர்ந்த அரசியல் தலைவரும், உலகளவில் ஷியா மதத்தின் முக்கிய தலைவருமான ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக, குறிப்பாக ஷியா பிரிவினருக்கு எதிரான, வெளிப்படையான போர் அறிவிப்பாக கருதப்படுகிறது” என்று கூறினார்.

இதையடுத்து, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ள ஈரான், வளைகுடாவில் அமெரிக்காவின் நேச நாடுகள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதலை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பும் ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளார்.

கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை என ஈரான் அதிபர் ஆவேசமாக கூறிய நிலையில், தற்போது ஈரானில் இந்த சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்ப்பட்டு வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டு உள்ளார். அவரை கொல்ல முடிவு செய்த அமெரிக்கா, இஸ்ரேலின் உதவியுடன் அதை செய்து முடித்து உள்ளது.

கமெனியின் இருப்பிடம், அன்றாட நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப் பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் உளவுத்துறை தகவல்களை வழங்கியது. இதன்மூலம் அயதுல்லா அலி கமெனி தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருப்பது தெரியவந்ததும் அந்த கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமேனி மட்டுமின்றி அவரது மகள், மருமகன் ஆகியோரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் நாட்டை அழிக்கும் திட்டத்தை வகுத்தவர் கமேனி. மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் எல்லைகள் வரை தன் கரங்களை விரித்த ‘ஈரானிய ஆக்டோபஸின் தலைவன்’ என்றும் அவர் அறியப்பட்டார்” என்று குறிப்பிட்டது.

கமேனியின் மரணத்திற்குப் பிறகு, ஈரான் ஒரு புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாட்டை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட தற்காலிக தலைமை கவுன்சிலை அமைத்துள்ளது. 66 வயது மதகுரு ஒருவரும் இக்கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அலிரேசா அராஃபி அதன் தற்காலிக தலைமை கவுன்சிலின் நீதி உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை பிரஜைகள் காயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை பிரஜைகள் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.