Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கொண்டையங்கேணி தமிழர்களுடைய பூர்வீக கிராமத்தை முஸ்லீம் கிராமம் என பெயர்சூட்டி அபகரிக்க முயற்சி

மட்டு கொண்டையங்கேணி தமிழர்களுடைய பூர்வீக கிராமத்தை முஸ்லீம் கிராமம் என பெயர்சூட்டி அபகரிக்க முயற்சி

6 months ago
in செய்திகள்

தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் என தெரிவித்து எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என அபகரிப்பதற்காக செயற்படுகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கிண்ணியடியில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வட்டார எல்லைகளின் எல்லை நிர்ணயத்தை அடையாளப்படுத்தும் பிரேரணை ஒன்றை கடந்த 26ம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் தவிசாளர் கொண்டுவரப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த பிரதேசம் கடந்த காலத்தில் எல்லை நிர்ணய பிரச்சனை ஒரு தீர்க்கப்படாத இந்த பிரச்சனைக்கு ஒரு முழுமையான தீர்வு காணப்படாமல் இந்த எல்லை நிர்ணயங்களை தங்களுக்கு தாங்களே தீர்க்கமாக தீர்மானித்து ஒரு வருமானத்தை நோக்கமாக கொண்டு எமது சமூகத்தின் எல்லையை பின்னுக்கு தள்ளுகின்ற செயற்பாடை செய்யக் கூடாது என வலியுறுத்தினேன் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

கோறளைப்பற்று பிரதேசத்தில் 14 வட்டாரங்கள் இதில் 4 முஸ்லீம் வட்டாரங்கள் 10 வட்டாரம் தமிழ்ர்கள் வாழுகின்றனர் இருந்தபோதும் 8 வட்டாரங்கள் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழுகின்ற சூழல் இருக்கின்ற நிலையில் 2 வட்டாரம் தமிழர்கள் முஸ்லீம்கள் எதேச்சையாக குடியேற்றப்பட்டு வாழ்ந்து வருகின்ற வட்டாரம்.

இதில் எங்களுக்கான ஒரு எல்லை நிர்ணயம் வகுக்கப்படாமல் பிரதேச சபையால் அவர்களாகவே எல்லை நிர்ணயங்களை தயாரித்து அதில் வருமானங்களை அதிகரிக்க வேண்டும் என்பது. எதிர்காலத்திலே தமிழ் கிராமங்கள் சுருங்கி போகக்கூடிய அளவிற்கு ஆதாரங்களாக அமைந்து விடும்.

எனவே வாழைச்சேனை வட்டாரம், கறுவாக்கேணி வட்டாரம் என்பது இரண்டு தமிழ் கிராமங்கள் இந்த கிராமங்களிலே தான் இந்த பிரச்சனைகள் இருக்கின்றது. கறுவாக்கேணி வட்டாரம் என்பது வாழைச்சேனை இலங்கை மின்சார சபையின் வீதியை ஒட்டியதாக அமைந்திருக்கின்றது.

ஆனால் அதனை அடையாளப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக குழப்பங்கள் எழுப்பப்பட்ட போது அவை அனைத்தும் இடை நடுவில் விடப்பட்டது. இந்த நிலையில் பிரதேச சபையின் நிர்வாகம் எதனூடாக கறுவாக்கேணி 10ம் வட்டாரத்தை பிரித்து இது தான் கறுவாக்கேணி 10 ம் வட்டாரம் என அறிவிக்க போகின்றது என்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது

கோறளைப்பற்று பிரதேச சபை என்பது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேச சபையாக இருந்தாலும் மக்களுக்கான ஒரு சரியான தீர்வுகளையும் முடிவுகளையும் எடுக்க முடியாமல் இருக்குமம் ஒரு பிரதேச சபையாக இருக்ன்றது.

இந்த கறுவாக்கேணி 10 ம் வட்டாரத்தில் கிராம சேவகர் பிரிவு தனி தமிழ் மக்களின் சோந்த பிரிவு ஆனால் இதே கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவுடன் உள்ள கொண்டையன்கேணி என்கின்ற கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லீம் கிராமம் என உருவாக்கப்பட்டு கொண்டயன்கேணி கிராம அபிவிருத்தி சங்கம், மற்றும் பள்ளிவால், சனசமூக நிலையம், என அரச சாhர்ந்த சங்கங்கள் அனைத்தும் கொண்டயங்கேணி முஸ்லீம் கிராமம் என உருவாக்கப்பட்டுள்ளது.

பல தசப்தங்களாக கொண்டையன்கேணி கறுவாக்கேணி இணைந்து கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவில் இயங்குகின்ற ஒரு கிராமம் இந்த கொண்டையங்கேணி என்று உருவாக்கப்பட்டுள்ள பெயர் மட்டும் தான் கொண்டையங்கேணி முஸ்லீம் என்று இருக்கின்றதே தவிர அவர்களுடைய அனைத்து நிர்வாக செயற்பாடுகள் ஓட்டுமாவடி பிரதேச செயலகத்திற்கு உள்ள செம்மண்ஓடை கிராம சேவகர் பிரிவுக்குள் நடை பெறுகின்றது.

ஓட்டுமாவடி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள செம்மண்ஓடை கிராம சேவகர் பிரிவில் நிர்வாக நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமாக இருந்தால் ஏன் கொண்டையங்கேணி முஸ்லீம் கிராமம் என இந்த கிராமத்துக்கு பெயர் சூட்டவேண்டும். இது மிகவும் ஆபத்தான விடையம்.

தமிழர்கள் வாழ்ந்துவரும் பூர்வீக கிராமங்களின்; பெயர்களை தங்களுடைய கிராமங்கள் இன்றி தெரிவித்து எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்தார்கள் என்ற ஆதாரத்தை காட்டுவதற்காக செயற்படுகின்றனர் இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்குடா தேர்தல் தொகுதி என்பது முஸ்லீம்களுடனும் தமிழ்களுடனும் ஒரு தேர்தல் நோக்கத்துக்கான தொகுதி ஆனால் ஓட்டுமாவடியில் இருந்து உருவாக்கப்படுகின்ற இந்த சங்கங்கள், அமைப்புக்கள், விளையாட்டுகழகங்கள், வெளிநாடுகளில் இருந்து உருவாக்கப்படுகின்ற சங்கங்கள் எல்லேமே தங்களுடைய விலாசத்தை, அடையாளத்தை கல்குடா என்று பதிவு செய்து வருகின்றனர். இது ஏன் தேவை?

இது இன்னொரு 20 வருடத்திற்கு பின்னர் முஸ்லீம் சமூகத்தின் பிள்ளைகள் சொல்லும் இது முஸ்லீம்களின் பூர்வீக நிலம் என்பர். எனவே கோறளைப்பற்று பிரதேசத்தில் எங்கள் சமூகம், மக்கள் சார்ந்து யாரும் பேசுவதில்லை அரசியல் ரீதியாக பிரதேச சபைகளில் இருக்கின்ற அவர்கள் அனைவரும் வாய்மூடிகளாக தங்களுடைய அற்ப சொற்ப பிரதேச சபை ஆசனத்தை பாதுகாப்பதற்காக பேசாமல் இருக்கின்றனர் அல்லது பேச தெரியாமல் மடந்தையாக இருக்கின்றனர்.

நாங்கள் அப்படி இருக்க முடியாது எனவே கல்குடா தொகுதிக்குள் இருக்கும் மக்களே உன்னிப்பாக சிந்திக்க வேண்டும். அதேவேளை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது வாழைச்சேனை வட்டாரம், கறுவாக்கேணி வட்டாரம் ஆகிய இரண்டு வட்டாரம் என்பது பரிசீலனை செய்யப்பட்டு எல்லை நிர்ணயம் ஒழுங்காக செய்யப்பட்டதன் பின்னர் தான் பிரதேச சபைக்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளை கல்குடா என்று அழைப்பது தொடர்பாக பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கவனதிற்கு கொண்டுவந்து இவ்வாறு இயங்குகின்ற அமைப்புக்களை தடைசெய்து அவர்கள் அவர்களுடைய பிரதேசத்தில் அவர்களுடைய அமைப்புக்களை நடாத்துவதில் எந்தவித பிரச்சனையும். இதற்கு இல்லை தீர்வுகளை பெற்றுதருமாறு கோரியுள்ளேன்.

அதேவேளை கல்குடா என இன்னொரு கிராம சேவகர் பிரிவை அடையாளப்படுத்தி அவர்களுடைய அடையாளம் என இனிவரும் காலங்களில் காட்டக்கூடாது. ஒரு இனத்தின் உடைய மொழியும் அடையாளமும் முகவரியும் எங்கு களவாடப்படுகின்றதே அங்கே இந்த இனத்திக்கு எதிரா வன்முறையும் பயங்கரவாதமும் தோற்று விக்கப்படுகின்றது என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.