Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

மட்டக்களப்பில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

2 days ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் மற்றும் கோட்டமுனை பகுதிகளில் 18 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிக்கன் குனியா நோயாளர்களும் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வீடுகள் மற்றும் காணிகளில் தேங்கியுள்ள நீரை அகற்றி சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணிப்பாளர் வைத்தியர் இளைதம்பி உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று (5) வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரப் பகுதிகளில் உள்ள கொக்குவில் மற்றும் கோட்டமுனை பகுதிகளில் வீடுகள் பரிசோதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், மாநகரசபை அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து செயல்பட்டனர்.

தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக சில வாரங்களாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கொக்குவில் பகுதியில் 12 பேரும், கோட்டமுனை பகுதியில் 6 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு உருவாகும் இடங்களை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தங்களது வீடுகள், காணிகள் மற்றும் பராமரிப்பு இல்லாத வெற்றுக்காணிகளை சுத்தம் செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நுளம்புகள் மூலம் பரவும் சிக்கன் குனியா நோயாளர்களும் தொடர்ந்து பதிவாகி வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; பல விமானங்கள் இருந்ததாக தகவல்!
உலக செய்திகள்

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; பல விமானங்கள் இருந்ததாக தகவல்!

March 7, 2026
மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!
செய்திகள்

மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!

March 7, 2026
ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை; “எதிரி நாடுகளின் மீதான தாக்குதல் இனி வரும் நாட்களில் பலமடங்கு தீவிரமடையும்!”
உலக செய்திகள்

ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை; “எதிரி நாடுகளின் மீதான தாக்குதல் இனி வரும் நாட்களில் பலமடங்கு தீவிரமடையும்!”

March 7, 2026
அக்குரேகொட இரட்டைக்கொலை; உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது
செய்திகள்

அக்குரேகொட இரட்டைக்கொலை; உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது

March 7, 2026
ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம்; அமெரிக்கா, இலங்கைக்கு அழுத்தம்?
செய்திகள்

ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம்; அமெரிக்கா, இலங்கைக்கு அழுத்தம்?

March 7, 2026
பிற நாடுகளின் நடுநிலை முயற்சிக்கு ஈரான் பதில்: “அமெரிக்கா, இஸ்ரேலிடம் பேசுங்கள்!”
உலக செய்திகள்

பிற நாடுகளின் நடுநிலை முயற்சிக்கு ஈரான் பதில்: “அமெரிக்கா, இஸ்ரேலிடம் பேசுங்கள்!”

March 6, 2026
Next Post
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு